சாதிப்பதற்கான சாவிகள்
Keys to Achievement
ஒரே வகுப்பில் படித்த மாணவர்களில் ஏன் சிலர் மேலே போகிறார்கள், சிலர் நின்றுவிடுகிறார்கள்? திறமைதான் காரணமா? இல்லை. சாதிக்கிறவர்கள் கையில் இருப்பது சில சாவிகள். இந்தப் புத்தகத்தை வாசித்தபோது நான் உணர்ந்தது - தேவன் தம்முடைய பிள்ளைகளுக்கு இலவசமாகக் கொடுத்த இந்தச் சாவிகளை எடுத்துப் பயன்படுத்தத் தெரியாமலேயே பலர் போராடுகிறார்கள்.
இந்தப் புத்தகம் உங்கள் வாழ்க்கையை எவ்வாறு மாற்றும்
எனக்குள்ளேயே "என்னால் முடியுமா" என்ற கேள்வி எத்தனை முறை எழுந்திருக்கிறது. ஆனால் யோசுவா 1:8-ல் தேவன் யோசுவாவுக்குச் சொன்ன வார்த்தை இந்தப் புத்தகம் மூலமாக எனக்குள் ஒளி போட்டது - "இந்த நியாயப்பிரமாண புஸ்தகம் உன் வாயை விட்டுப் பிரியாதிருப்பதாக." தியானம், கீழ்ப்படிதல், தீர்மானம் - இவை மூன்றும் சேர்ந்தால்தான் "உன் வழி வாய்க்கப்படும், உன் காரியம் சித்தியாகும்." தாவீது கல்லை எடுத்து கோலியாத்தை வீழ்த்தியதுபோல, தேவன் கொடுத்த சாவியை எடுத்துப் பயன்படுத்தத் தயங்காதீர்கள்.
ஒரு சாவி ஒரு கதவை மட்டுமே திறக்கும். ஆனால் உங்கள் வாழ்வில் பல கதவுகள் திறக்கக் காத்திருக்கின்றன. இந்தப் புத்தகத்தில் நான் கற்ற ஒவ்வொரு கொள்கையையும் கீழ்ப்படிதலோடு பின்பற்றுங்கள். கதவுகள் தாமாகவே திறக்கும்.
