Felix எழுதிய புத்தகம்

ராஜபாதை

Royal Path

நீங்கள் தேவனுடைய பிள்ளை. அப்படியென்றால், நீங்கள் ஒரு ராஜகுமாரன்/ராஜகுமாரி. ஆனால் பலர் அந்த அடையாளத்தை மறந்து, சாதாரண வாழ்க்கை வாழ்கிறார்கள். இந்தப் புத்தகம் உங்களுக்கு உங்களுடைய உண்மையான ராஜ அடையாளத்தை திரும்ப நினைவூட்டுகிறது.

தேவனின் ராஜபாதையில் நடக்கும் ரகசியங்களை அறியுங்கள்
ராஜாவாக்கப்பட்ட உங்கள் அடையாளத்தை உறுதிப்படுத்துங்கள்
அழிவுக்கு வழிகோலும் ஒடுக்கு வழிகளை விட்டு விலகி, ஆசீர்வாத பாதைக்குத் திரும்புங்கள்
📞 தொடர்பு: 9892860372

இந்தப் புத்தகம் உங்கள் வாழ்க்கையை எவ்வாறு மாற்றும்

எரேமியா 6:16-ல் தேவன் சொல்கிறார்: "பூர்வ பாதைகளை ஆராய்ந்து பாருங்கள், அதில் நடவுங்கள்." அந்த பூர்வ பாதை எது? அதுதான் ராஜபாதை. தாவீதும், சாலொமோனும், தானியேலும் நடந்த பாதை. இந்தப் புத்தகத்தில் பெலிக்ஸ் சகோதரர் வேதாகமத்தை வாசிக்கும் அனுபவத்தில் இருந்தே எழுதியிருக்கிறார். ஒவ்வொரு அதிகாரத்திலும், வறுமை-நோய்-பயம்-சாபம் ஆகியவற்றை எப்படி அடியோடு வெட்டி வீசி, தேவ பிள்ளையாக ராஜ வாழ்க்கை வாழலாம் என்பதை எளிய வார்த்தைகளில் காட்டுகிறார்.

இந்தப் புத்தகம் உங்கள் கைக்கு வந்தால், வெறும் வாசிப்புக்காக வாசிக்காதீர்கள். ஒவ்வொரு பக்கத்தையும் ஜெபத்தோடு படியுங்கள். ஏற்படும் மாற்றத்தை நீங்களே உணர்வீர்கள். தேவன் உங்களுக்காக திறந்து வைத்திருக்கும் ராஜபாதையில் இன்றே முதல் அடி வையுங்கள்.